பிரேசில்: பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள், வனவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வனத்திற்குள் அருகருகே, மிக நெருக்கமாக தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனர்.
இந்தப் பழங்குடிகளில், 'கொகாமா' என்ற இனத்தைச் சேர்ந்த, 20 வயது பெண், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதை, பிரேசில் சுகாதாரத் துறை கடந்த 1ம் தேதி உறுதிசெய்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 'மார்ச் 18ம் தேதி, மருத்துவர் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்து தனிமைப்படுத்தப்பட்ட அடுத்த மூன்று நாட்களில், எனக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவந்தன' எனத் தெரிவித்துள்ளார்.