பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள்

பிரேசிலைச் சேர்ந்த மேத்யூஸ் பெயிடோசா என்ற மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பிலிருந்த, 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் கொகாமா இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மருத்துவரும், அவருடன் இருந்ததால் பாதிப்புக்குள்ளானவர்களும், அமெசானில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு கடந்த வாரத்தில் சென்று வந்துள்ளனர். இதனால், பழங்குடியின மக்களில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடும் என, அஞ்சப்படுகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழிடம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இருந்து, 24 மணிநேரம் படகுப் பயணம் செய்து வெளியே வந்தால் மட்டுமே அவர்களுக்கு, மருத்துவ வசதிகள் கிடைக்கும் நிலை உள்ளது.


பிரேசில்: பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள், வனவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வனத்திற்குள் அருகருகே, மிக நெருக்கமாக தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனர்.