தேசமே... இவர்களை போற்று

'கொரோனா'வின் கோரமுகம் கண்டு அஞ்சாமல், தேச நலனுக்காக உழைப்பவர்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பவர்கள், உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள். அடுத்தபடியாக இரவு பகலாக 24 மணி நேரமும் மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தான் காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினரும். நமது நலனுக்காக, நாட்டின் நலனுக்காக இரவு பகல் பாராது உழைக்கும் இவர்களை, தேசமே... போற்று!


இவர்களை போற்றுவோம்...!



உலககை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனாவை கொல்வோம் என்று இவர்கள் சபதம் எடுத்துள்ளனர். சொல்லோடு மட்டுமின்றி, அதனை செயலில் நிரூபித்து வருகின்றனர் நாட்டின் தூய்மை இவர்களால் சாத்தியமாகிறது. வீடுகளுக்குள் நாம் பத்திரமாக இருக்கும்போது, தங்கள் குடும்பத்தை மறந்து ரோட்டுக்கு வந்து நமக்காக பணியாற்றுகின்றனர். தன்னலத்தை மறந்து ரோட்டுக்க வந்து நமக்காக பணியாற்றுகின்றனர். தன்னலத்தை மறந்து நாட்டின் நலன் பாதுகாப்புக்காக உழைக்கும். இவர்களை மனமார போற்றுவது நமது கட்டாய கடமை